

மட்டக்களப்பு கொம்மாதுறையைப் பிறப்பிடமாகவும், பெரிய ஊறணியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவராம் அவர்கள் 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற தலைக்காரியாலய பரிசோதகர்-கூட்டுறவுத்திணைக்களம்), கருணையம்மா சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடுவில்தம்பி வேல்முருகு(சித்தவைத்தியர்), பரமேஸ்வரி வேல்முருகு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோகிலகுமாரி சிவராம்(ஆசிரியை- விபுலானந்தா வித்தியாலயம், மயிலம்பாவளி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஷஷாந்தன்(மாணவன்- புனித மிக்கேல் கல்லூரி), தருஜன்(மாணவன்- புனித மிக்கேல் கல்லூரி), விஷாலினி(மாணவி- வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார்(ஓய்வுபெற்ற சிரேஷ்ட முகாமையாளர்- தேசிய சேமிப்பு வங்கி), சிவராணி, சிவராஜீ(கனடா), சிவரதி(பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார தாதிய உத்தியோகஸ்தர்) மற்றும் காலஞ்சென்ற சிவகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராஜசேகரா(பிராந்திய உணவுகள் மருந்துகள் பரிசோதகர்- மட்டக்களப்பு), தனலெட்சுமி(ஆசிரியை, விவேகானந்தா மகளிர் கல்லூரி, கல்லடி- உப்போடை), திவ்யமலர்(கனடா), மோகனாம்பிகை, காலஞ்சென்றவர்களான வசந்தகுமார், அருணோதயம், முரளிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற யோகரெட்ணம், சபேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சின்னத்தம்பி சிவசிதம்பரம்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- காகிதஆலை) அவர்களின் அன்புப் பெறாமகனும்,
சுஜீவன், அபிநயா, யசிந்தன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹர்சிகா, யுக்தா(கனடா), மதுரா(கனடா), சஞ்சுதன், சோபனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 540/3, ஆவியார் ஒழுங்கை,
திருமலை வீதி,
பெரிய ஊறணி,
மட்டக்களப்பு.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP Ram mama It’s really lost to all of us