

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை, Dammam சவுதி அரேபியா, Rheine ஜேர்மனி, Rushden பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்பிரமணியம் உதயகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அதிகாலையிலே விழித்தெழும் எங்கள் அப்பா
என்னும் இல்லத்து சூரியன் ஆழ்ந்து உறங்கி
வருடம் ஒன்று ஆகிறது இன்னும் நம்பவே முடியவில்லை
அப்பா நீங்கள் எம் அருகில் இல்லை என்று.
அன்பொழுக அழைத்து ஆசையாய் அரவணைத்து,
அறிவுதனைப்புகட்டி, ஆனந்தமாய் நாம்வாழ
உங்களையே அர்ப்பணித்து,
இன்பமாய் நாம் இணைந்து,
மகிழ்ந்திருக்கும் வேளையிலே
பாசப் பிணைப்பறுத்து
பறித்துத்தான் எடுத்துவிட்டான்.
துன்பம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தோமே
எங்கள் சுமைதாங்கி மறைந்ததனால் துயரத்தில் மூழ்கினோமே
குடும்பம் என்றகோவிலின் குலவிளக்கு
அணைந்ததனால் எங்கள் இல்லத்தில்
ஒளி இழந்து போனோமே!
நித்தம் விளக்கேற்றி நெஞ்சுருக வேண்டியதால்
பக்குவமாகவே இறையடி சேர்ந்த திதியில்
ஆத்மசாந்தி பூஜை செய்து அஞ்சலியை செலுத்துகிறோம்
உங்கள் ஆசியினை வேண்டுகின்றோம்
அவனியில் நாம் வாழும்வரை