ஓம் நமசிவாய… 🙏 நல்லூர் முருகனடியில் பிறந்து மயூரன் என பெயர் கொண்டு, வேலவனுடன் வளர்ந்த மைந்தன் நீங்கள் பிள்ளையாரிடம் தவழ்ந்து சிவனுடன் வளர்ந்து சிங்கப்பூரில் பிள்ளையாரின் சன்னதியில் நின்று, அருளின் வழியில் தொண்டு செய்து, பண்ணிசை பாடி பக்தி பரப்பி, “திருமுறை காவலர்” என்ற பெரும் பட்டம் பெற்று இனிய முகம், புன்சிரிப்புடன், அனைவரையும் மதித்து நடந்து, அப்பா போல சமூகத்திற்காக அயராது பாடுபட்ட நல்ல மனிதனே… இன்று கண்களுக்கு மறைந்தாலும், நினைவுகள் நிலைத்து நிற்கும் இறைவன் திருவடியில் நீங்கள் இருந்து ஆத்ம முக்தி பெற பிரார்த்திப்போம் தாங்க முடியாத துயரமிது, நினைக்க முடியாத இழப்பிது, அப்படி என்ன அவசரம் அப்பா தன்னுடன் அழைத்துக்கொண்டாரா நித்தியம் இறை நீழலே என நினைத்து சட்டென மறைந்தீர்களே தாங்கொணா வலியில் தவிக்கும் அந்த தாயின் கண்ணீரை துடைத்து மனைவி மக்கள் சகோதரர்கள் உங்கள் இழப்பைத் தாங்கும் சக்தியை தந்து இறைவன் தான் துணையாக இருக்கவேண்டும், உங்கள் ஆன்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனை என்றும் தொடரும் … ஓம் சாந்தி… சாந்தி… சாந்தி… 🙏 ஆழ்ந்த அனுதாபங்கள்…
With deepest sympathy remembering our dearest friend Mayoorathan. Will deeply missed by all who knew him and love him. May cherished memories bring comfort and peace. Rest In Peace