Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 NOV 1941
இறப்பு 18 NOV 2025
திருமதி சிவசோதி செல்வரட்ணம்
வயது 83
திருமதி சிவசோதி செல்வரட்ணம் 1941 - 2025 ஈச்சமோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை கடற்கரை வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட சிவசோதி செல்வரட்ணம் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் ஆசை மகளும்,காலஞ்சென்றவர்களான சோமஸ்கந்தசாமி கனகம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

சோமஸ்கந்தசாமி செல்வரட்ணம்(கொழும்பு கொட்டாஞ்சேனை ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா) அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்ற வடிவம்மா மற்றும் குனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகசபை(றீகல்), அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற Dr இராஜேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

சுரேந்திரன் மதிவதனி(இந்தியா), ஜெயவதனி(யசோ- சுவிஸ்), சுதாகரன்(ராஜன்- இங்கிலாந்து), சுகிந்திரன்(பவா- சுவிஸ்), சுபைதரன்(தம்பி- சுவிஸ்), சந்திரவதனி(சியாமளா- அஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்திரிசியா, முருகதாஸ், பிறேம்றாஜ், ரஜனி, சுபாஜினி, கவிதா, பகீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கீதன், மயூரி, உஷா, ராகினி, பார்த்தீபன், காண்டீபன், முகுந்தன், சுதர்ஷன், விதுஷன், மதுஷன், றுத்திரன், குமரன், பீஷ்மன், அபிராமி, கிருத்திகன், பிருந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கோபிகா, மித்திரன், வர்ஷிகா, இஷான் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல 2 Elvitigala Mawatha Borolla Colombo 8 இல் சனிக்கிழமை பி.ப 05:00 மணிமுதல் இரவு 09:00 மணிவரை சுப்றீம மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகலில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று அதனை தொடர்ந்து பி.ப 01.30 மணியவில் boralla மயானத்தில் இந்து முறைப்படி தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தொடர்புகளுக்கு:
ராஜன் - மகன் +94742544366

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜன் - மகன்
பவா ‪ - மகன்
தம்பி - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 18 Dec, 2025