Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUN 1947
இறப்பு 30 NOV 2023
திரு சிவசம்பு இராஜலிங்கம் 1947 - 2023 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, அம்பாறை கல்முனை, சுன்னாகம், கொழும்பு வெள்ளவத்தை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு இராஜலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-11-2024

ஆண்டு ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எமைவிட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புச் செல்வமே...

ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்

கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே!

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும் ஐயா!!

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்