Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவசம்பு குமாரலிங்கம், மஞ்சுளாதேவி குமாரலிங்கம்
இறப்பு - 22 MAY 2021
அமரர் சிவசம்பு குமாரலிங்கம், மஞ்சுளாதேவி குமாரலிங்கம் 2021 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

சிவசம்பு குமாரலிங்கம்:-
திதி:26/05/2026

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு குமாரலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

குமாரலிங்கம் மஞ்சுளாதேவி:- 
திதி:07/06/2026

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரலிங்கம் மஞ்சுளாதேவி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் இருவரும் எம்மை விட்டுப் பிரிந்து
ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!

எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அப்பா, அம்மா!

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அப்பா, அம்மா!

அப்பா,அம்மா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்..!

 எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால்
 விண்ணகம் சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?
 அப்பா,அம்மா உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
 அழியாது நினைவலைகள்!

 பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
 நேர்மையுடன் வாழ்ந்தீர்களே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices