Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவசம்பு குமாரலிங்கம், மஞ்சுளாதேவி குமாரலிங்கம்
இறப்பு - 22 MAY 2021
அமரர் சிவசம்பு குமாரலிங்கம், மஞ்சுளாதேவி குமாரலிங்கம் 2021 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சிவசம்பு குமாரலிங்கம்:-

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு குமாரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குமாரலிங்கம் மஞ்சுளாதேவி:-

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரலிங்கம் மஞ்சுளாதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள் எங்கள்
முன்னே சொர்க்கத்தை போல் காதினில்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!

எங்களுக்கு வாழ வழிகாட்டிய எங்கள்
அப்பா எம் தேவைகள் அனைத்தையும்
நிறைவேற்றி விட்டு எம்மை விட்டு
போக உங்களுக்கு எப்படி மனசு வந்தது அப்பா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!

"எங்களின் அன்பு அம்மா!
வையத்துள் வாழ்வாங்கு வாழ
வழிகாட்டிய எங்கள் அம்மா!
 கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!

விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை அம்மா
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்து எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!

ஆலமரமாய் நீங்கள் எங்களை
அரவணைத்தீர்கள் விழுதுகளாய்
நாம் இருந்தோம் அம்மா!
எங்கெங்கோ வாழ்ந்தாலும் எம்மை
இணைக்கும் சக்தி தொலைதூரம்
இருந்தாலும் உங்கள் குரல் கேட்டு
மகிழ்ந்திருந்தோம் அம்மா!"

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices