Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 08 JAN 1959
இறப்பு 17 MAY 2026
அமரர் சிவசம்பு சிவஞானசம்பந்த்தமூர்த்தி (மூர்த்தி)
வயது 67
அமரர் சிவசம்பு சிவஞானசம்பந்த்தமூர்த்தி 1959 - 2026 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sindelfingen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு சிவஞானசம்பந்த்தமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஒரு மாதம் கடந்துவிட்டது என்று சொன்னாலும்
உன்னை இழந்த வலி மட்டும்
இன்னும் நேற்று நடந்ததுபோல் தான் இருக்கிறது அப்பா…
வீட்டின் அமைதி கூட
உன் குரலைத் தேடுகிறது…
உன் சிரிப்பு இல்லாத அந்த வெறுமை
எங்களை தினமும் சோதிக்கிறது…
எங்களுக்காக நீ விட்டுச் சென்ற அன்பும்
உன் உழைப்பின் நினைவுகளும்
இன்று எங்கள் வாழ்க்கைக்கு துணையாக இருக்கிறது…
முதல் மாதம் நினைவு நாளில்
கண்ணீருடன் உன்னை நினைத்து வணங்குகிறோம் அப்பா…
நீ எங்கள் இதயத்தில் என்றும் வாழ்கிறாய்… 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 20 May, 2026