யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிமுத்து சிவரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் அப்பா!
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டீர்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது...
ஆண்டுகள் பல அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் மறக்காது
ஒவ்வொரு நொடியிலும்
இதயத்தின் துடிப்பைப்போல்
அருகிலே நினைவுகள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
உங்கள் நினைவுகள் எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்
ஏங்கித் தவிக்கின்றோம் உமை நினைத்து
என்றும் எங்கள் மனதில் நிறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..