1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவரத்தினம் புவனேஸ்வரி
(பிள்ளை அக்கா)
வயது 86

அமரர் சிவரத்தினம் புவனேஸ்வரி
1938 -
2024
யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவரத்தினம் புவனேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா அம்மாவென்று
கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
அம்மா உன் நினைவோடே...!
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது எம் நெஞ்சம்...!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகரை
வேண்டிக்கொள்ளுகிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்