

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானை நிரந்தர வசிப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் சாந்தசோலை வீதி 5ம் ஒழுங்கையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவராசா இராசேஸ்வரி அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சொர்ணம்(சுவிஸ்), சிவநேசன்(சுவிஸ்), சந்திரநேசன்(லண்டன்), சிவறஜனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி(கனடா), துரைசிங்கம், காலஞ்சென்ற புவனேஸ்வரி, நற்குணராஜா(ஜேர்மனி), கனகேஸ்வரி, யோகேஸ்வரி(சுவீடன்), நவரெத்தினராஜா(லண்டன்), இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகராசா(சுவிஸ்), அன்பு(சுவிஸ்), நந்தினி(லண்டன்), தீபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜதீஸ், மதுமிதா, அஜினா, அக்சரன், சுமுகன், சஜந்த், மீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதித்யா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.