யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சவுதி அரேபியா Dammam, Riyadh , கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் சிவானந்தம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று ஆனது கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எங்கள் அன்பின் வடிவமே அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் இலக்கணமாய் பண்பின் உருவமாய் என்றும்
எங்கள் இதயத்தில் குடியிருக்கும் அன்பு தெய்வமே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் ஓர் மாதம் மறைந்துவிட்டது
கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்றும் பிராத்திக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Late Mr. S.Sivanantham had lived a full life of more than 89 years. He was a person of hard work , dedication , kind words and self confidence : After living in Canada for more than 22 years , he...