Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JAN 1952
இறப்பு 08 APR 2024
அமரர் சிவபாதசுந்தரம் பொன்னம்பலம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 72
அமரர் சிவபாதசுந்தரம் பொன்னம்பலம் 1952 - 2024 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்வாய் பத்தானையைப் பிறப்பிடமாகவும், அல்வாய், டென்மார்க் Nyborg, Aalborg மற்றும் பிரித்தானியா Ilford, Essex ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் பொன்னம்பலம் அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் முருகேசு சின்னம்மா பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதியம்மா கதிர்காமதம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிநாயகி(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயமுரளி(மாதவன்), ஜெயகாந்த்(மதன்), ஜெயானந்த்(மயூரன்), ஜெயசிவா(மகிலன்), ஜெயந்தன்(மன்மதன்), ஜெயசாந்தன்(சாந்தன்), ஜெயாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனுஷா, பவி, சசி, எம்மா, கிரிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருள்(பிரித்தானியா), பவானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹரிஷ், ஹாசினி, சியனா, ஆரியன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்புள்ள அப்பா...

குழந்தை பருவத்தில் உன்மடி மீது
என்னை சுமந்தும்
 உன் நெஞ்சில் எங்களை அனைத்தும்
எங்கள் சிறு அசைவு அறிந்தும்
உன் சுவாசத்தை மெதுவாய் வெளியேற்றினாய்
பாசமாய் எங்கள் நெற்றியில் முத்தமிடும்
நேரங்களையும், தொலைத்தோம் அப்பா...

இந்த பருவ வாழ்க்கையில் இனி நினைத்தாலும்
கிடைக்காத நாட்கள் உங்கள் நெஞ்சில்
 எங்கள் தலை சாய்த்து உறங்கிய இரவுகள்.
இழந்தது எல்லாம் திரும்ப கிடைக்கும் என்றால்
நாங்கள் முதலில் கேட்பது உங்களைத்தான் அப்பா..

என்றும் அன்புடன்
உங்கள் மனைவி, பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யாழினி - மகள்
மாதவன் - மகன்