எங்கள் அன்பு அம்மா பல திறமைகளை தன்னிடத்தே கொண்ட தன்னடக்கம் நிறைந்த ஒரு பண்பான பெண்மணி . சிறு வயதிலிருந்து அவரது தொண்ணுறாவது வயதுவரை புத்தகம் படிப்பதை நிறுத்தவில்லை . வாசிப்புதான் அவருள் ஒரு பக்குவ தண்மையை ஏட்படுத்தியிருந்தது. ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தும் அவரது வாழ்க்கை முழுவதும் சாதாரண வாழ்க்கையிலேயே நாட்டம் கொண்டிருந்தார். பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பிறருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். இது மத்தவர்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரியும். அவர்கள் சமையல் ரொம்பபிரசித்தம் - தன்னுடைய ஸ்டைலில் நிறைய பரிசோதனைகள் செய்வார்கள். அவர் தையல் கூட அப்படித்தான். எப்பவும் வித்யாசமாக எதாவது முயட்சி செய்து பார்ப்பார்கள். எந்த காரியத்திலும் ஒரு நேர்த்தி இருக்கும். அவர்கள் வாழும்காலத்தில் அவர்களை இன்னும் கொண்டாடியிருக்கலாம் என்று இப்போ தோன்றுகிறது. 37 வருடங்கள் என் மனைவியை சொந்த மகளுக்கும் மேலாக treat பண்ணி இருந்தார்கள். எங்கள் பிள்ளைகள் அம்மாவை ரொம்பவே miss பண்ணுகிறார்கள். அம்மா எல்லாத்துக்கும் நன்றி .