யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Faaborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தங்கராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் வருகை தந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அன்னாரின் மதியபோசன நிகழ்வு 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் Diernæs Forsamlingshus A/S, Viekærvej 3, 5600 Faaborg, Denmark எனும் முகவரியில் நடைப்பெறும்.