யாழ். குடத்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, யாழ். அல்வாய், குடத்தனை மேற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சின்னார்த்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் சின்னார்தம்பி சிவபாக்கியம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை 06.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று மதியம் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் சபின்டீகரனக் கிரியை நடைபெறும். 29.05.2024 புதன்கிழமை ந.ப 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் மதிய போசண நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
அல்வாய் கிழக்கு,
அல்வாய்.