Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 28 MAR 1950
இறப்பு 02 APR 2024
திருமதி சிவபாக்கியம் ஈஸ்வரநாதன்
முன்னாள் ஆசிரியை
வயது 74
திருமதி சிவபாக்கியம் ஈஸ்வரநாதன் 1950 - 2024 கல்லுவம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரவெட்டி கரனவாய் மேற்கு கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் மல்லாவி திருவள்ளுவர் நகர் யோகபுரம் unit 2, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஈஸ்வரநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா முப்பத்தொன்று நாட்கள் கரைந்ததம்மா
உன் அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
 இன்னும் கரையவில்லையம்மா!
 நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
 பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
 எம் இதயங்களை விட்டு என்றும்
 பிரியாத தாய் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
 கேட்கவில்லையாம்மா! ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
உன்னை போன்று அன்பு செய்ய
யாரும் இல்லையம்மா இவ் உலகில்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-05-2024 வியாழக்கிழமை அன்று நடைபெறும். அதனைத் தொடர்ந்து 04-05-2024 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் Queen Palace Banquet Hall 1173 Brimley Rd, Scarborough, ON M1P 3G5, Canada எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.