ஆசிரியப்பெருந்தகையே! தங்கள் மறைவு கேட்டு மனம் ஆறாது கவலை கொள்கிறது… “தங்கராஜா டீச்சர்” என்றதும் கண்முன்னே வருவது, தங்களின் சாந்தமான முகமும், பூரித்த சிரிப்பும், நெற்றி நிறைய விபூதியும், குங்குமப்பொட்டும் தான்… “யாழ்.புனித ஜோன் போஸ்கொ வித்தியாலயம்” நமக்கான அறிமுகத்தை தந்ததை மறக்க முடியுமா… ஒவ்வொரு மாணாக்கர்களையும், தங்களின் சொந்த மகவுகளைப்போலவே தாங்கள் உச்சி முகர்ந்ததை மறக்க முடியுமா… பாட போதனை என்பதற்கும் மேலாக தங்களின் அன்புக்கும், பண்புக்கும், அரவணைப்புக்கும் அந்த வித்தியாலயத்தின் வகுப்பறை சுவர்களே உயரிய சாட்சிகள்… நல்லோர்களையும், பண்பாளர்களையும், சான்றோர்களையும் இவ்வுலகம் என்றுமே மறவாது… அம்மா.. உங்கள் நினைவுகளும், நாமமும் என்றுமே மறவாதது… எத்தனையோ துன்பங்களை கற்றுத்தந்த இப்பூவுலகம், தங்களின் மறைவையும் தாங்கிக்கொள்ளும் வல்லமையை தரட்டும்… அமைதியில் உறங்குங்கள், அம்மா! என்றும் உங்கள் நினைவுகளுடன்… தங்கள் மாணாக்கன்… குகன் யோகராஜா (ஒஸ்லோ, நோர்வே)