Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 10 DEC 1940
இறப்பு 29 JUL 2022
அமரர் சிவபாக்கியம் கந்தையா 1940 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம் Brown Road ஐப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, பிரித்தானியா லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இன்றோடு 31 நாட்கள்
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?

நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !

அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெறும் பின்னர் ந.ப 12:00 மணியளவில் நடைபெறும் மதிய போசனம் நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
100 Kirkland Ave,
Ilford IG5 0TN,
UK.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.