திதி:04/11/2025
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் ஜெயனொளிபவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் வாழ்க்கையின்
வேராய் வாழ்ந்தவள் நீ
வாழ்க்கையில் ஒப்பிடா
வேறாய் விளங்குபவள் நீ
உடலுக்குள் உயிர்
வளர்த்த கடவுள் நீ
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய
சுமைதாங்கியும் நீயம்மா!
ஆயிரம் ஆண்டுகள்
அடுத்தடுத்து வந்தாலும்
ஆழிசூழ் உலகில் அன்னை
உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில்
எமக்கினி யார் தருவார்?
அருமருந்தாய் இருந்து
அல்லல் என்ற நோய் தீர்த்து
அன்பென்னும் பாசத்தை
அமுதுடன் கலந்தளித்து
அகிலத்தில் நாம் வாழ
ஆக்கமும் ஊக்கமும் தந்த
ஆற்றலே! தாயே! அன்னையே!!
அருகில் நீங்கள் இல்லை அம்மா- ஆனால்
எம் அனைவரையும் அணைத்தே
இருக்கின்றீர்கள் அம்மா!
காலன் எங்கள் உறவுப்பாலத்தை
அறுத்து- உயிர்மூச்சை
பறித்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்...
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் முதலாம் ஆண்டு வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 04-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். 09-11-2024 வியாழக்கிழமை அன்று கனடா கந்தசாமி கோவிலில் அவரது நினைவாக மதியபோசனம் நடைபெறும் அதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.