யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி லிங்க வாசம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் இரத்தினலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 22-11-2024
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை
அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீங்கள் இல்லா வெற்றிடத்தை
ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!
ஆசையாய் நேசமாய் வளர்த்த
பிள்ளைகளும், மருமக்களும்,
பாசமாய் பண்புடன் வளர்த்த
பேரப்பிள்ளைகளும், பூட்டப்பிள்ளைகளும்
உங்களை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!
இறைக்கே இணையாகி வானிற்கு நிகராகி
பேரன்பிற்கு இலக்கணமானவரே
மணி மகுடம் அணியா அரசி அம்மா - நீங்கள்!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் - மீண்டும் வர
ஒழுக்கத்தால் தீபமேற்றி சூடமாக எரிந்து எமக்கு
ஒளி தந்த தாயே நீங்கள் மண்ணுலகை விட்டு
மறைந்தாலும் எங்களின் மனங்களில்
என்றென்றும் வாழ்ந்திடுவீர்கள் தாயே!!
எங்களின் வளமான வாழ்விற்கு வழிகாட்டி நின்ற தாயே!
உங்கள் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்!
Our deepest condolences Om shanthi 🙏