

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசமலர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 08-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பரமகுருநாதன், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயவதனன்(லண்டன்), காயத்திரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யர்மதா(லண்டன்), ராஜகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவானப்பிள்ளை, இராஜசிங்கம், குலசேகரம் மற்றும் இரத்தினசிங்கம், நவரட்னம், திலகவதியார், விநாயகமூர்த்தி, குணரட்னம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
றெமிஜன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Kunam and Mani, Please accept my heart fet condolences. She was smilling always. I colud not believe it. I am very, very ------------------------sad. Chandrakumaran (master)