Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 AUG 1969
இறப்பு 05 NOV 2023
அமரர் சிவானந்தம் ஸ்ரீதர் 1969 - 2023 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் புலோலி வடக்கு, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் ஸ்ரீதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 24-10-2024

உன்னுடைய மரணம் மர்மமாகவே உள்ளது எமக்கு
யார் உன்னை என்ன செய்தார்கள்
என்ன நடந்தது ஏன் நடந்தது என்று தெரியாமல்
உன் சகோதரர்கள் ஏங்கித் தவிக்கின்றோம் இங்கே...
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன்னைப் போன்று அன்பான உறவு கிடைக்க நாங்கள்
தவம் செய்திருக்க வேண்டும் அய்யா..
உன் பிரவைத் தாங்க முடியாமல்
உன் சகோதரங்கள் அழுது தவிக்கின்றோம்..
நீ எம்மோடு திரும்பி வந்து விடு அய்யா..

ஆண்டு ஆயிரம் கடந்தாலும்
ஆறிடுமோ உன் நினைவலைகள்
பாசமழை பொழிந்து பரிவோடு பக்குவமாய்
எம்மோடு உறவாடிய தம்பியே...

அழகிய உன் சிரிப்பெங்கே
இனிமையான அறிவுரையும்,
முத்து போன்ற சிறந்த பேச்சுமெங்கே
காணத்துடிக்கிறது எம்மனம் வாரும் அய்யா..

உங் பாசத்திற்கு அளவேயில்லை தம்பி!
எம் கவலைகளைச் சொல்வதற்கு
வார்த்தைகளே இல்லை!

தம்பி தம்பி என்று கூப்பிட
ஏங்கிநிற்குது எங்கள் மனம்!
வாரும் அய்யா!

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

என்றும் உங்கள் நினைவால் வாடும் சகோதரர்கள்..!

தகவல்: சகோதரர்கள்

Photos