பிறப்பு 09 AUG 1965
இறப்பு 26 OCT 2021
திருமதி சிவலோகநாதன் யோகேஸ்வரி
வயது 56
திருமதி சிவலோகநாதன் யோகேஸ்வரி 1965 - 2021 கண்டாவளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா, உங்களின் இழப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அழுது புலம்பும் குடும்பத்தினருக்கு எதைச் சொல்லி ஆறுதல்படுத்த என்பது புரியவில்லை. நல்லவர்கள் இவ்வுலகில் நீண்டகாலம் ஜீவிப்பதில்லை என்பதை விதி மீண்டும் மீண்டும் சொல்லிச்செல்கின்றது. நீங்கள் செய்த தர்மம் கூட உங்களை காப்பாற்றாமல் விட்டுவிட்டது. கதறி அழும் காந்தனுக்கும் , உங்களை காப்பாற்றி விடுவேன் என நம்பிக்கையிடன் பதறியபடி இலங்கை போன சுமதிக்கும், என்ன செய்வது என்று தெரியாமல் கனவாக இருக்குமோ என்று துடிக்கும் குட்டிக்கும் ,உங்களையே உலகமாக வாழ்ந்துவரும் அப்பாவுக்கும் நாங்கள் என்ன சொல்ல. அம்மம்மா, அப்பம்மா என்று பேரப்பிள்ளைகள் கண்கலங்கி நிற்பதை பார்க்க கஷ்டமாக இருக்குது. மாண்டவர் மீண்டும் வருவதில்லை என்பது தானே நியதி. உங்கள் ஆத்மா தெய்வசந்நிதியில் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Tue, 26 Oct, 2021
நன்றி நவிலல் Thu, 25 Nov, 2021