Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 04 JUN 1960
இறப்பு 04 OCT 2024
திரு சிவலிங்கம் சாந்தராஜா
வயது 64
திரு சிவலிங்கம் சாந்தராஜா 1960 - 2024 கல்முனை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo, Reggio Emilia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சாந்தராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

 என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!

நாட்கள் பல சென்றாலும் கனவெல்லாம் கண்ணீர் சொரிய கண்கள் நீரில் மூழ்க கண்டது எல்லாம் உம் நினைவாக
துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது! 
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே!
ஒரு மாதம் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு தந்தையாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்! 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து Circolo Arci Cella (Via Giambattista Vico, 152, 42124 Cella RE, Italy) மண்டபத்தில் மதியபோசன விருந்துபசாரம் இடம் பெறவிருப்பதனால் அன்றைய தினம் தாங்களும் வருகைதந்து இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 05 Oct, 2024