Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUN 1960
இறப்பு 04 OCT 2024
அமரர் சிவலிங்கம் சாந்தராஜா
வயது 64
அமரர் சிவலிங்கம் சாந்தராஜா 1960 - 2024 கல்முனை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 23-09-2025

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo, Reggio Emilia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவலிங்கம் சாந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனதப்பா
உங்களை இழந்து
ஆறாத யுகங்களாய் ஒவ்வொரு
கணமும்
கனத்த நாட்களாய் உங்கள்
நினைவுகளோடு கழிகிறதே அப்பா

உலகமே நீங்களென உறுதியாய்
நாமிருக்க
மனைவி பிள்ளைகளை இப்படி
தவிக்க விட்டு
ஏனப்பா விண்ணுலகம் சென்றீர்கள்
உங்கள் பிரிவை நம்பமுடியாது
தவிக்கிறோமே நாங்கள்

உங்கள் நகைச்சுவைப் பேச்சும்
சிரித்த முகமும்
உபசரிக்கும் பண்பும் உதவி செய்யும் குணமும்
அன்பான மனமும் மறக்கமுடியாது
தவிக்கிறோமே நாம்

எத்தனை உறவுகள் என்
அருகில் இறுந்தாலும்
நான் தேடும் ஒரே உறவு
நீங்கள் மட்டுமே
ஏனென்றால் நீங்கள் என்
உறவு அல்ல
என் உயிர் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்..


அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute