யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா மாமடு, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சொர்ணம் அவர்களின் நன்றி நவிலல்.
பூமியை நாங்கள் பார்க்க
பூரிப்பாய் பெற்றெடுத்த அம்மாவே
புன்னகையும் பொறுமையும் நிறைந்திருக்க
எங்களை போற்றி வளர்த்தீர்கள்
சிரிப்பே சிறப்பாய் கொண்ட நீங்கள்
சிந்தையால் உயர்ந்தீர்கள்
பாசமாய் பலருடன் பழகிட
நெஞ்சமதில் நிலை கொண்டீர்கள்.
எமது குடும்பத் தலைவி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தளர்வடைந்த நிலையில் தங்களது சொந்த தாய்போல் அரவணைத்து பிரியமான உணவுவகைகளை வழங்கி விருந்தோம்பிய அயலவர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் மறைவுச்செய்தி கேட்டு உடனே
ஓடி வந்து ஆறுதல் கூறி உதவிகள் பல புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், தொலைபேசி வாயிலாகவும், வேறு வழிகளிலும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், பூக்கள். பூமாலைகள், பதாதைகள், மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்திய அன்பு உள்ளங்களுக்கும், மறைவுச் செய்தி கேட்ட நாளிலிருந்து இறுதி கிரியைகள் நடைபெறும்வரை பல வழிகளிலும் உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மேலும் இறுதி கிரியைகள் நடாத்திய குரு அவர்களுக்கும், ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், மறைவுச் செய்தியை பிரசுரித்த பத்திரிகை, இணையத்தளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
வீட்டு முகவரி:
Zürich Obermuhlweg - 31
8424 Embrach
Switzerlan.
ஆழ்ந்த அனுதாபங்கள் , அன்னாரின் ஆத்மா சாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்