Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 28 DEC 1981
மறைவு 07 JUL 2024
திரு சிவலிங்கம் பிரதீபன் 1981 - 2024 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பிரதீபன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 05-08-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவிலும், வீட்டுக்கிரியைகள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவிலும் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 06-08-2024 செவ்வாய்க்கிழமை ந.ப 12:30 மணிமுதல் பி.ப 18.00 மணிவரை Palais De L’inde Restaurant (51 Rue Theophile Gaubert 93330 Neuilly - sur - marne) எனும் இடத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.