சிவலிங்கம் அண்ணா!
“ம்” என்ற உங்கள்
ஒரு வார்த்தைக்குள்
உலகத்தின் அனைத்து பாசமும்,
கேள்விகளும் பதிவாகிவிட்டிருந்தது…
உறவினர் நிகழ்வுகளுக்கு,
“நான் உன்னுடன் வருகிறேன்”
என்ற ஆணைக்குள்
என் அப்பாவின் பிம்பத்தை
பார்த்துக்கொண்டிருந்தேன்…
உறவுகளுக்கு என்றும் பாரமாயிருக்கக்கூடாதென்றும்,
பிள்ளைகளின் உணர்வை பெருமைப்படுத்தவும்,
நீங்கள் எடுத்த காலக்கணக்கு
பாசத்தை பறைசாற்றிவிட்டது…
வயோதிபர் இல்லத்தில்
வந்து பார்க்க தெம்பில்லாத,
என்னைப்போல் ஓர்
உணர்ச்சிப் பிழம்பை
இனி நானே சந்திக்கக் கூடாது….
சென்று வாருங்கள்!
அன்புடன்,
யோகா செல்வன்
ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி