நான் வளர்ந்து விவரம் தெரிந்த வயதில் என் அம்மா ,அப்பா , அப்பப்பாவிடம் உங்களைப் பற்றி அறிந்தவைகள் ஏராளம். அதிலும் என் அம்மா சொல்லுவார் நீ பிறந்த போது உனக்குப் பெரியப்பா ஆசையாக சங்கிலி செய்து போட்டவர் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.நானும் எனது பெரியப்பா வை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் . ஃபோனில் கதைக்கும் போது நான் பெரியப்பா என்று அழைத்தால் ஓ..சொல்லுங்கோ என்று கதைப்பார். நாங்களும் அவரும் கதைத்து பேசிய வார்த்தைகள் மட்டும் தான் ஆனால் எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை.எங்கள் கனடா ராசன் தாத்தா இங்கு வந்த போது நீங்கள் பிறந்து வளர்ந்த விதம் பற்றி கேட்டறிந்தவை ஏராளம் பெரியப்பா.எங்கள் அப்பப்பா சொல்லுவார் உங்களுடைய அப்பா, பெரியப்பமார், அத்தைமார்களை அடித்து வளர்க்க வில்லை செல்லமாகக் தான் வளர்த்தேன் என்று அடிக்கடி சொல்வார்.உங்களுக்கு அப்படி ஒரு அன்பான அப்பா, எங்களுக்கும் அப்படி ஒரு அன்பான அப்பப்பா.உங்கள் தம்பிமார், தங்கைமார் உங்களில் அப்படி ஒரு பாசம்.என் அப்பாவும் விம்மி விம்மி அழுகிறார்.அப்படியொரு பெரியப்பாவை எப்படியாவது நானும், தம்பியும் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டோம்.ஏன் பெரியப்பா எங்களையெல்லாம் பார்க்காமல் போய் விட்டீர்கள்.நீங்கள் உங்கள் அம்மாவிடம் சென்று விட்டீர்கள். என் ஆசைப்பெரியப்பாவின் ஆத்மா சாந்தியடைய நான் இறைவனைப் பிராத்திக்கிறேன் பெரியப்பா!.
Miss you machan, you are in a better place now