இந்துமாகடலின் இடையிலான முத்தென விந்தைகள் நிறைந்து விளங்கும் ஈழத்தாயின் கலைமணி மகுடமென தண்ணொளி பெற்று விளங்குவது யாழ்ப்பாணம் . "எண்சாணுடம்புக்குச் சென்னி சிறந்திடும்"என்றே உரைப்பது போல பொன்சேரிலங்கை சிகரமென வரும் புண்ணியம் ஓங்கிடும் யாழ்ப்பாணம். இந்நகரின் இயற்கை எழிலோங்கும் ஓரு ரே சாவகச்சேரியாகும்.பொங்கியெழம் அலைகள் ஊஞ்சலாடிக் கொஞ்சி விளையாடும் கடற்கரையும் அதனால் வந்துலாவும் மந்தமாருதமும் நிறைந்த ஊரே சாவகச்சேரி காய்மாண்ட தெங்கின் பழம் விழும், தேன் மாங்கனி சிதறும், வாழைப்பழங்கள் முற்றிச்சிந்தும், பலாப்பழங்கள் கனிந்து பிளந்து விழும், இதனால் தேம்பமுத்தினிய நீரோடும்,பொன்பழச்சொரியும் பொழிந்த செழுந்தாதிறைக்கும் இத்தகைய எழில் வளங்கொழிக்கும் ஊரே சாவகச்சேரி.இவ்வூரில் சீலமும் சிறப்பும் செம்மையும் படர வானறிவன் பதம் போற்றி வாழ்ந்த புகழ்மிகு சிவகுரு அவர்களுக்கும்,உடுவிலைப்பிறப்பிடமாகக்கொண்ட மங்கை நல்லாள் குமுதினி அவர்களுக்கும் மூத்த மகன் லக்சுமி காந்தனும், இரண்டாவது மகன் கெளரி சங்கரும் , மூன்றாவது மகளாக ஸர்வோஜினி, நான்காவது மகனாக ஞானசங்கரையும் ஐந்தாவது மகளாக சஞ்சீவினியையும் பெற்றெடுத்து தாய்மையில் பூரிப்படைந்தார் உங்கள் பாசமிகு தாய்.நீங்கள் தளிர் நடை நடந்து மழலை மொழி பேசி வளர வளர உங்கள் அறிவும், அழகும் ஒருங்கிணைந்து வளர்ச்சியடைந்தன.1987 ஆண்டு அன்னிய வெறியர்களின் அட்டகாசத்தால் தன் சொந்த மண்ணையும் தன் சொந்த பெற்றோர்களை விட்டு, எல்லா வற்றிற்கும் மேலாக இடையறாது வழிபட்டு இன்னல் நீங்கி இன்னருள் பெற்று குலதெய்வமாகிய வீரபத்திரர் பெருமானையும் விட்டகன்று அன்னிய தேசம் கனடா சென்றடைந்தார்.பின் அவர் அங்கிருந்து ஆண்டுகள் உருண்டோடின ஓடின ஓடின அவரது வாழ்க்கையே இறைவனிடம் ஓடி விட்டது...!
Miss you machan, you are in a better place now