டேய்!காந்தன் நீ எங்களை விட்டு போனாலும் நாங்கள் உன் மீது வைத்த பாசமும் நீ எங்கள் மீது வைத்த பாசமும். என்றும் அழியாது.டேய் நீ சிரிக்கும் போது உன் கண்களும் சிரிக்கும் அந்த அழகே தனி.டேய் எங்கள் அம்மா எத்தனையோ தடவை எனக்கு சொல்வார் உன்னை பேர் சொல்லியோ டேய் காந்தன் என்றோ கூப்பிட வேண்டாம் அண்ணா என்று மரியாதையாக கூப்பிட வேண்டும் என்று சொல்வார்கள் அதற்கு நான் இல்லை அம்மா பேர் சொல்லி டேய் காந்தன் என்றால் தான் எங்களுக்குள் என்றும் அன்பும் பாசமும் இருக்கும் என்று சொல்வேன்.ஆனால் இப்போது உன்னை அண்ணா என்று மரியாதையாக கூப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ஆனால் நீ என்னை விட்டு பிரிந்து விட்டாய். என்றாலும் நான் உன்னை அண்ணா என்று மரியாதையாக கூப்பிட நீ எனக்கு தெரியாமல் எங்கையோ ஒழிந்து இருந்து உந்த கள்ள சிரிப்புடன் என்னைப் பார்த்து கொண்டு இருப்பாய்.அண்ணா.............
Miss you machan, you are in a better place now