டேய்!காந்தன் நீ எங்களை விட்டு போனாலும் உன் மீது நாங்கள் வைத்துள்ள பாசமும் நீ எங்கள் மீது வைத்த பாசமும் என்றும் அழியாது.நீ சிரிக்கும் போது உன் கண்களும் சிரிக்கும் அழகே தனி.எங்கள் அம்மா எத்தனையோ தடவை எனக்கு சொல்வார் உன்னை பேர் சொல்லியோ, டேய் காந்தன் என்றோ கூப்பிட வேண்டாம் அண்ணா என்று மரியாதையாக கூப்பிட சொல்வார்.நான் அம்மாவுக்கு சொல்வேன் இல்லை இப்படி கூப்பிட்டால் தான் எங்களுக்குள் என்றும் அன்பும் பாசமும் இருக்கும் என்று சொல்வேன்.இப்போது உன்னை ஒரு முறை என்றாலும் அண்ணா.... என்று கூப்பிட ஆசையாக இருக்கிறது ஆனால் நீ என்னை விட்டு பிரிந்து விட்டாய் என்றாலும் நான் உன்னை அண்ணா என்று கூப்பிட எனக்கு தெரியாமல் எங்கையோ ஒழிந்து இருந்து உந்தன் கள்ள சிரிப்புடன் என்னைப் பார்த்து கொண்டு இருப்பாய்.அண்ணா...................
Miss you machan, you are in a better place now