Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1960
இறப்பு 07 APR 2020
அமரர் சிவகுமாரி தர்மஜெகநாதன்
வயது 59
அமரர் சிவகுமாரி தர்மஜெகநாதன் 1960 - 2020 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் உடுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரி தர்மஜெகநாதன் அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று உடுவிலில்  காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அரியரத்தினம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மஜெகநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தமீரன், கம்சிகா, வினிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரோகினி செல்வநாதன், சிவகாந்தி(இளைப்பாறிய தபால் அதிபர்- மட்டுவில் தெற்கு), சிவகாமினி சிறிசந்திரகாந்தன்(Montreal), சிவறதி கணேஸ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கீர்தீபன் அவர்களின் ஆசை மாமியும்,

ஜெயராணி, புஸ்பராணி, சரோஜினிதேவி, மகாதேவி, இந்திரா, சாந்தினிதேவி, கலாதேவி, அருணவிஜம், அருணஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2020 புதன்கிழமை அன்று உடுவிலில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், கணவர், மருமகன்