1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவகுமாரன் கஜேன்
(காணன்)
சமாதான நீதவான், சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர்- தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ் மாநகர செயற்பாட்டுக்குழு உறுப்பினர்
வயது 28
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி கொடிகாமம் இராமாவில்லைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுமாரன் கஜேன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-06-2022
அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
இன்றெமைக் கலங்க விட்டதேனோ!
நிறைவேறா உன் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய்
இவ்வுலகை விட்டு?
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம்
எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது...
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்