
அமரர் சிவகுரு சிவகுமார்
முன்னாள் களஞ்சியப் பொறுப்பாளர், Mascons (PVT) Limited- ஈவினை
வயது 60
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivakumar Sivaguru
1962 -
2023

"சின்னண்ணா" என்றால் உறவுகளின் "தாய்"! "குமாரண்ணா" என்றால் ஊரவரின் "தந்தை"!! வழிதெரியா உறவுக்கு ஒளிகாட்டி! வலிதெரியா வாழ்க்கைக்கு நல் வழிகாட்டி! உறவுகளின் தாயாய்! சுற்றமதின் தந்தையாய்! அன்பின் அடைக்கலமாய்! பணிவிடையில் சேவகனாய்! பாசத்தின் பட்டறையாய் கண்டிப்பின் கடிவாளமாய் ஆதரவற்றோரின் இருகரமாய் இறைபக்தியே வாழ்வியலாய் வாழ்ந்த எம் அன்பாளனை நல்ல பண்பாளனை காவுகொள்ள காலன்வடிவில் வந்தவனெவனோ! விதிவடிவில் சதிசெய்து வலி தந்தவனெவனோ!! சின்னண்ணா!!!! மனைவி பிள்ளைகளை தவிக்கவிட்டு இமைகளை நீ மூடிவிட்டாய்! உறவுகள் எம்மை அழவிட்டு இறைவனை நீ நாடிவிட்டாய்!! உங்களின் அழகான ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ?குணம்?
Write Tribute