Clicky

பிறப்பு 13 APR 1946
இறப்பு 13 SEP 2021
அமரர் சிவகுருநாதன் நல்லையா (சந்திரன்)
வயது 75
அமரர் சிவகுருநாதன் நல்லையா 1946 - 2021 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mrs.Chandra Ravindrakumaran - London United KIngdom 15 SEP 2021 United Kingdom

சந்திரன் மாமா, உங்கள் இனிமையான குரலை இனி எப்போதும் தொலைபேசியூடாகக் கேட்க முடியாது என்பதை நினைக்கும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது! சந்திரன் மாமா என்றால் அன்பு, பண்பு, மரியாதை, அறிவான அதே வேளை குறும்பு நிறைந்த பேச்சு இவற்றைத்தான் எப்போதும் எனக்கு ஞாபகப்படுத்தும். எங்கள் அம்மாவை 'மூத்தக்கா மூத்தக்கா' என்று அன்பொழுக அழைத்து உறவாடுவது இன்னமும் என் காதுகளில் கேட்கிறது! உங்கள் இழப்பு குடும்பத்தினரை எப்படி பாதித்திருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை! உங்கள் இறுதிப்பயணம் சுகமாக அமையட்டும்! போய் வாருங்கள் மாமா! உங்கள் ஆத்மா இறைவனடி சேர என் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள்!