எங்கள் குடும்பத்தின் மூத்த குலமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய், உடைந்து நிற்கிறோம். உன்னை தாலாட்டி சீராட்டி வளர்த்த கைகள் துடிக்கிறது நீ இல்லாமல், உன் நகைச்சுவை பேச்சும் எதுவென்றாலும் வென்று விடலாம் என்ற உன் துடிப்பான செயலும் பாசத்திற்கு குறைவில்லாத உன் மனமும் என அனைத்தையும் இழந்து நிற்கிறோம். அனைவருக்கும் செல்லப்பிள்ளை உனை விரும்பாதோர் யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை இப்போது நீயும் எங்களுடன் இல்லை இதை ஏற்க மறுக்கிறது எங்கள் மனம்.. உன் தாய் தந்தை பார்த்து பார்த்து செதுக்கிய சிற்பம் இன்று கலைந்து சென்றது.. உன் தாய் தந்தைக்கு என்ன வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல போகிறோம்.. ஆற்றொண்ணாத் துயரமது ஊற்றாகி ஓடுதையா உன் ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம்.. உன் நினைவால் வாடும் ஆசை மாமா குடும்பத்தினர்
Dear Anuragie, Please accept my heartfelt condolences to you and your family. May his soul rest in peace.