
முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், முல்லைநகர், வட்டுவாகல் ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்ட சிவகுரு சீவரத்தினம் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு புனிதம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தங்கராசா புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணபூசணி அவர்களின் பாசமிகு கணவரும்,
கணேசமூர்த்தி, பார்வதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனா, சந்திரகலா, சந்திரமோகன்(ப.நோ.கூ.சங்கம் முல்லைத்தீவு), சந்திரபிரபா, சந்திரரஜனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரன், பார்த்திபன்(முருகானந்தா மகாவித்தியாலயம், வேணாவில்), செரின், புஸ்பானந்தம் ( கமநல சேவைத் திணைக்களம் ,அளம்பில்), ஜெகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற லலிதாதேவி, குணபத்மினி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகராசா, தங்கமுத்து ஆகியோரின் மருமகனும்,
தயன்ஷி, சகான்யா, ஷைந்தவி, ஷருக்சன், டிலுஜன், கரிஸ், ஜதுசன், ரிஷான், வினோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று வட்டுவாகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வட்டுவாகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.