6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Servan ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு ஜெயந்தி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் சுமந்த தாயே!
எம் வாழ்வின் வலி சுமந்த நீ
ஆண்டு ஆறாக எம்முடன் இல்லை ஆனாலும்
எம் வாழ்வின் வசந்தங்களிலெல்லாம்
வாழ்கிறாய் ..!
கடலில் தோன்றும் அலைகள் யாவும்
கரையைச் சேர்வதைப்போல
உங்கள் எண்ண அலைகள் யாவும்
எங்களுடனேயே வாழ்கின்றன..!
வாழ்ந்த வாழ்க்கையில் உயிரோடு ஒட்டிய உறவே
தஞ்சை கோயில் உள்ளவரை
சோழனுக்கு மரணமில்லை..!
ஈழம் என்ற சொல்லிருக்கும்வரை
தலைவனுக்கும் மரணமில்லை..!
உங்களால் கட்டமைக்கப்பட்ட
எங்கள் வரலாறு இருக்கும் வரை
உங்களுக்கும் மரணமில்லை..!
மரணத்தைவிட தொன்மையான
கண்ணீரால் அஞ்சலிக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Rip athai