யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Asnæs ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞானவதி காந்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும்
அணையாத சுடராய்
வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே
நின்றாலும்
அழியாத
நினைவலைகள்
எம் அகத்தில்
நின்று ஆழத்திலே
வாட்டி
வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன்
நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...
அம்மாவின் நினைவாக திதி நிகழ்வுகள் டென்மார்கில் நடைபெறும்.
ஏழாலை வடக்கு கண்ணகை அம்மன் கோவில் கல்யான மண்டபத்தில் 28-03-2026 சனிக்கிழமை அன்று அன்னாரது நினைவாக மதியபோசனம் வழங்கபடும். இதனை சொந்த அழைப்பாக ஏற்று அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.