யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டு இன்று உங்கள் பாதம்
பணிகின்றோம் நாமிங்கு
பார்விட்டு போய்
நீங்கள் பத்தாண்டு பறந்தாலும்
எம் பாதுகாவலனே
உங்கள் பாசம் மறக்காது
உங்கள் பாதம் பணிகின்றோம்
நாங்கள் இப்போ
உங்கள் தோற்றம் மறைந்தாலும்!
உங்கள் தூயமுகம் தொலைந்தாலும்!!
தூரம் தொலைவில் நீங்கள் துயில் கொண்டாலும்!!!
உங்கள் தொடர்பை எம்மால்
துண்டிக்க முடியாமல் துவளுகின்றோம் தூயவனே
விதி செய்த சதியால்
நீங்கள் வேறு உலகம் விரைந்தாலும்
உங்கள் விழுதுகள் உம் நினைவால்
விம்மித்தான் அழுகின்றார் இங்கே!!
ஐயிரண்டு ஆண்டு முன்பு
அங்கு நீர் சென்றாலும்
உங்கள் அன்பு மகனொருவன்
ஆரவாரத் திருநாள் அன்று
ஆகாயத்திலிருந்து அறுகரிசி அள்ளியெறிந்து
அகம் தான் மலர்ந்திருப்பீர் மன்னவரே
பத்தாண்டுகள் என்ன
பாருள்ளவரையும்
எம்மோடு நீங்கள் இருப்பீர்கள்!
உங்களோடு நாமிருப்போம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கும்
மனைவி, பிள்ளைகள், மருமகள், சகோதரர்கள்.
பத்தாண்டு நினைவில் நினைவுகூரும் உங்கள்குடும்பத்தலைவரின் இன்றைய நினைவுநிகழ்வில் நாங்களும் இணைந்து “நீர்நினைவில் நனைகின்றோம்”! இவ்வண்ணம் சிறிமாஸ்டர் குடும்பம்.uk