கிளிநொச்சி பூநகரி குமிழமுனையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rheine ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானம் நிமலவக்சலன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஐந்து ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
நாம் சேர்ந்து சிரித்த நாட்களை
எண்ணி அழுகிறோம்
சேர்ந்து கதைக்கவும் முடியாது என்பதால்
கல்லறை வரை மறையாத
களங்கமற்ற பாசம் காலவதியாகி
ஓராயிரம் ஆண்டு சென்றாலும்
இழக்க முடியாத நேசம்!
நெஞ்சம் நெகிழ வைக்கும் அன்பு!
ஆண்டு ஐந்து ஆனாலும் உயிரை உலுக்கி
நடுங்க வைத்த பிரிவு!
நாம் மறைந்தாலும் அழியாத நீங்கள்
நடந்த தெய்வீகப் பயணம்
உறைந்து போன பௌர்ணமியில் உதிராமல்
மலர்ந்தே இருக்கும்
எம் மனத்திரையில் என்றும்!
கடந்துவிட்ட வருடங்களில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதையா
அப்பா தூக்கமில்லா இரவுகளை எங்களுக்குத்
தந்துவிட்டு நொடிப்பொழுதில் எம்மை
மறந்து துயில் கொள்ளப் போனதெங்கே
இதயங்களெல்லாம் நொறுங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!
நீர் எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீர்
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்..!
உங்கள் ஈடில்லா பாசத்திற்கு
எங்கள் கண்ணீர் இணையாகுமா ?
உருண்டு புரண்டு அழுகிறோம்
உங்கள் செவிக்கு கேக்கவில்லையா ?
உங்கள் நினைவில் வாடுகிறோம்
எங்கள் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !
I was saddened to hear that your passed away. My thoughts are with you and your family.