Clicky

18ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 NOV 1980
இறப்பு 06 JUL 2005
அமரர் சிவஞானசுந்தரம் கஜீபன்
மாணவர்- வயம்ப பல்கலைக்கழகம்
வயது 24
அமரர் சிவஞானசுந்தரம் கஜீபன் 1980 - 2005 மல்லாவி யோகபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 17-06-2023

முல்லைத்தீவு மல்லாவி யோகபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கஜீபன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆழ்கடல் வற்றினாலும் என்
அன்புக் கடல் வற்றாத என்
அன்புச் செல்வமே
நீ இல்லாத உலகில்
என் வாழ்வே இருண்டதையா

நீ இல்லாதது எம் இதயமே இருண்டதய்யா
காலம் செய்த கோலமய்யா
கடவுள்கூட இரங்கவில்லையப்பு
என்ன பாவம் செய்தேனோ?

வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!

நொடிப்பொழுதில்
எம்மை தவிக்கவிட்டு எங்குதான்
முகவரி இல்லாத இடத்திற்கு
தன்னந் தனியே சென்றாயோ!

உன் பிரிவை நினைத்து எங்கள்
கண்ணீரால் கவலையை ஆற்றுகின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்