Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 NOV 1980
இறப்பு 06 JUL 2005
அமரர் சிவஞானசுந்தரம் கஜீபன்
மாணவர்- வயம்ப பல்கலைக்கழகம்
வயது 24
அமரர் சிவஞானசுந்தரம் கஜீபன் 1980 - 2005 மல்லாவி யோகபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு மல்லாவி யோகபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கஜீபன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

கறையில்லா செல்வம் கருணை சேர் உள்ளம்
கலந்து வடித்த எங்கள் கஜீப சித்திரமே
நிறைவாழ்வு தன்னை நிலவாழ்வு தன்னில்
நெறியோடு வாழ்ந்திட்ட ஒளி தீபமே
முறையான அன்பு நிறைவான பண்பு
முழுவதும் சேர்ந்து அமைந்த பொற்குடமே
குறை தன்னைப் போக்கும் மருந்தாக நின்று
குறிப்பறித்து உதவி செய்த குணக்குன்றமே
இறையன்பு, பிறரன்பு, விருந்தோம்பல் தன்னில்
எம்போதும் பெயர் பொறித்த பெரு விருட்சமே
உறைந்திட்ட அதிர்ச்சியால் நாம் இன்னும் மீளவில்லை
உயிர்நீத்து மூவைந்து ஆண்டுகள் ஆகியும்
உறைவிடம் விண்ணில் உண்டெனில் அங்கு
உறைவிடம் உமக்கொன்று உண்டு உண்மை
பிறைசூடிய பெருமானவன் பிரசன்னம் தன்னில்
பேரின்ப சொர்க்கத்தில் சாந்தி பெறுக 

தகவல்: குடும்பத்தினர்