5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவசிதம்பரம் சிறீதர்
பழைய மாணவர் -Vavuniya Tamil Madya Maha Vidyalayam, University of Jaffna – Bio Science 1987/88, University of Hertfordshire - Chemistry, Stability Analyst - DDD Ltd London, UK, விஞ்ஞான ஆசிரியர்
வயது 56
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசிதம்பரம் சிறீதர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு 5 மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள்..!
தகவல்:
மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள்