யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் ஜீவா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் ஆறமுடியவில்லை எம்மால்!..!
இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?
உன் புன்சிரிப்பைக் கண்டு...!
இனிமையான குரலைக் கேட்டு...!
ஓராண்டு காலம் கலைந்து விட்டதே!
காற்றுப் பெருவெளியில் உனைக் காணும்
நாளுக்காய் காத்திருக்கும் நாம்
கடவுளை வேண்டுகின்றோம் ஆத்ம சாந்திக்காய்!
அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனை 30-11-2019 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை 70 Brookside Pavilion, Brookside Road, Hayes UB4 0PL, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
My Deepest condolences and sympathy to the Family. Very good friend of mine and know him for very long time. Rest In Peace Friend |Nanba