Clicky

பிறப்பு 04 MAR 1946
இறப்பு 04 MAY 2021
அமரர் சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்
வயது 75
அமரர் சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள் 1946 - 2021 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உன் நண்பன் வா. ச . ஶ்ரீதரசர்மா 06 MAY 2021 Switzerland

ஆத்மா சாந்தி அடையட்டும். இதமில்லா இதயம் இதையும் தாங்க இறைவன் எனக்கு இன்னருள் புரியட்டும். வைத்தியநாதப் பெருமானே! என் நண்பன் வைத்தியின் ஆத்மா உன்பாதகமலங்களில் சாந்தி அடையட்டும். மிகவும் சிறுவயதிலேயே தாயையும் வாலிபத்தில் தந்தையையும் இழந்து தனித்தே வாழ்வில் எதிர்நீச்சல் அடித்து, குடும்பம் என்ற கோவிலிலும் குடிபுகுந்து, மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் என வாழ்வு நகரும் வேளைதனில் துணைவி தேவைப்படும் தருணத்தில், துணைவியையும் இழந்து நீ மண்ணுலகில் பட்டது போதும்..... சென்றுவா! நண்பா சென்றுவா! ஒத்த கோத்திரத்தானே.... ஓ…..ஓவென்று குளறியழ என் இதயம்தா ங்காது.... நான் இருக்கும் இடமும் தோதில்லை. கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப்போனாலும் உன்முகம் என் நாளும் எங்கள்முன் உயிர்வாழும். மண்விட்டு நீ விண்நோக்கி சென்றாலும் கண்விட்டு மறையாமல் கன காலம் இருப்பாய் நீ! வாய்சாலக்காரனே உன் வாய்சாதுரியத்தை நான் இனி எங்கு காண்பேன். உறுதியாக கூறுகின்றேன் பட்டாடை தானுடுத்தி பாதைதனில் காத்திருப்பாள் உன் துணைவி. சீர்வரிசை தானெடுத்து சிங்காரத்தோற்றமுடன் ஆராத்தியும் எடுத்து ஆனந்தத்துடன் அரவணைப்பாள் விண்ணுலகில் 🙏🏿 ஓம் சாந்தி! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! 🌺🌺 🌺

Tributes