1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிற்றம்பலம் குருநாதன்
(குஞ்சையா)
வயது 76
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் குருநாதன் அவர்கள்
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஓவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்!
ஆண்டொன்று ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறையாத உங்கள் நினைவு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதரர்கள், மச்சான்மார், மச்சாள்மார்,
பெறாமக்கள், உற்றார், உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்