1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிதம்பரப்பிள்ளை விஜயரட்னம்
முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதி
வயது 72

அமரர் சிதம்பரப்பிள்ளை விஜயரட்னம்
1947 -
2019
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை விஜயரட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்துணை கொடியதுயர் விரைந்திங்கு வந்திடினும்
எம் அப்பா நீ அருகிலிருக்க எங்களுக்கேது பயம்
என்றன்றோ இறுமாந்திருந்தோம்- இப்புவியில்
ஏதுமிலார் போல் எமை ஆக்கி விட்டு
ஏங்க வைத்துச் சென்றதன் மர்மம் ஏனோ?
காலச் சக்கரம் சுழன்று மாறினும்
கொண்ட கொள்கையில் பற்றுறுதி கொண்ட
கோடி மனிதரில் மாணிக்கம் நீ
ஆண்டொன்று சென்று ஓடி மறைந்தாலும்- நீ
அருகிலிருப்பதைப் போலவே எம் பிரமை
அன்பென்ற ஒன்றையே போதித்த அப்பாவே
என்றேன்றும் நாம் செல்வோம் உன்வழி நேர்மையாய்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
I MISS U